Also Watch
Read this
By: Web Team

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.
ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் வெப்ப அலையால், உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பிரான்ஸில் பள்ளிகள் மூடப்பட்டது. போர்டோவில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸாக (107.4 டிகிரி ஃபாரன்ஹீட்) உயர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாத சாதனையை முறியடித்தது. மத்திய பிரான்சின் பொய்ட்டியர்ஸில் வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸை எட்டிது.
ஸ்பெயினின் குளிர்ச்சி பகுதியான சான் செபாஸ்டியன் பகுதியில் வெப்பநிலை 40°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐரோப்பா பகுதிகளில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பிரான்ஸில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2 குழந்தைகள் காரில் சுயநினைவின்றி இருந்துள்ளன. பரிசோதித்ததில் குழந்தைகள் இறந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே பிரிட்டனின் தேசிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான மெட் ஆஃபீஸ் வெளியிட்ட அறிக்கையில், வெப்ப அலை சில இடங்களில் 39 டிகிரி செல்சியஸுக்கும் மேல் உயரக்கூடும் என்றும், இது 1957 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் பதிவான 35.6 டிகிரி செல்சியஸ் என்ற ஜூன் மாத சாதனையை எளிதில் முறியடிக்கும் என்றும் கூறியுள்ளது.
இப்படி பதிவாகி வரும் அதீத வெப்பத்தால் பெல்ஜியம் காடுகளில் உள்ள பறவைகள், சிட்டுக்குருவிகள் மற்றும் மைனாக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.