Also Watch
Read this
By: Web Team

பிறந்த நாளில் நண்பருக்கு மரணத்தை பரிசாக அளித்துள்ள நண்பனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவா (27). இவர் தனது தாய், தந்தையுடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 20ம் தேதி இரவு ஜீவாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய நண்பரான ஆனந்தராஜ் என்பவரை அழைத்துக் கொண்டு ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லும்போது டாஸ்மாக் கடையில் இருந்து சிறிது தூரம் சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பிறந்தநாள் கொண்டாடிய ஜீவாவிற்கும் அவரது நண்பர் ஆனந்த்ராஜிக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்பொழுது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஆனந்த்ராஜ், ஜீவாவை கீழே தள்ளி சாலையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் ஜீவா, தலையில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகிநகர் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் உரியிழந்த ஜீவாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆனந்தராஜை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அரியலூர் சென்ற போலீசார் ஆனந்தராஜை கைது செய்த கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.