news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து
tv

Also Watch

tv

Read this

ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து

அமெரிக்கா

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹார்முஸ் நீரிணை

ஈரானின் எண்ணெய் உற்பத்தி, விற்பனைக்கு பொது உரிமம் :

அமெரிக்கா-ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்(( Scott Bessent)) தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக ஈரானின் எண்ணெய் உற்பத்தி, மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் வகையில் 60 நாட்கள் செல்லுபடியாகும் பொது உரிமத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

மாஸ்கோவின் 4 விமான நிலையங்களை மூடிய ரஷ்யா :

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி சுமார் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறிய நிலையில், மாஸ்கோவின் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைனின் தெற்கு ஒடெசா பிராந்தியத்தின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் முன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேந்த அபர்ணா ராஜ் வெற்றி :

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேந்த 32வயது பெண் வெற்றி பெற்றார். வாஷிங்​டன்​ டிசி மேயர்​ பதவிக்​கான தேர்​தல்​ நவம்​பர்​ 3ஆம்​ தேதி நடை​பெற உள்​ள நிலையில், உட்​கட்​சி தேர்​தல்​ நடத்​தப்​பட்​டு மேயர்​ வேட்​பாளர்​கள்​ தேர்​வு செய்​யப்பட்டனர்.

இதில் குடியரசுக்​ கட்​சி சார்​பில்​ ஸ்டாசி​யா ஹால்​ என்​பவர்​ மட்​டும்​ வேட்​பு மனு தாக்​கல்​ செய்​திருந்த நிலையில், ஜனநாயகக்​ கட்​சி சார்​பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஐந்து வேட்பாளர்களுக்கு இடையிலான கடும் போட்டியில் 32 வயதான அபர்ணா ராஜ் வெற்றி பெற்றார்.

ராஸ் லஃபான் தொழிற்சாலையில் வெடி விபத்து - 13 பேர் பலி :

கத்தார் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ராஸ் லஃபான் (Ras Laffan) திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி தொழிற்சாலையில்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் தாக்குதல் காரணமாக ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், ஆலையில் மீண்டும் உற்பத்தி பணிகள் தொடங்குவதற்கு முன்பே வெடி விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

8 முறை பிறந்த நாள் வாழ்த்து, அவையை கலகலப்பாக்கிய காமராஜ்

4
6 mins agoshare
அவையை கலகலப்பாக்கிய காமராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau