news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்கா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு போர் வீரர் :

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து சிறப்பாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சையாக பேசியுள்ளார்.

வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஒரு போர் வீரர் என குறிப்பிட்டார். லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் காரணமாக நெதன்யாகுவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், டிரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

நீர் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக போராடுவோம் :

(Courtesy : ANI)

பாகிஸ்தானில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலில், நீர் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ((Khawaja Asif)) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீர் என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதி என்பதால் அச்சுறுத்தல் ஏற்படும் என உணரும் தருணத்தில் தக்க பதிலடி கொடுப்போம் எனவும் அவர் கூறினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாக கூறி, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை தர இந்தியா மறுத்து விட்டது.

அரசியல் நெருக்கடியால் பதவி விலகுகிறார் கெய்ர் ஸ்டார்மர் :

அரசியல் நெருக்கடி மற்றும் மக்களின் ஆதரவு குறைந்து வருவதன் காரணமாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெய்ர் ஸ்டார்மர் தலைமை வகிக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் தொடர்ந்து அவருக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அமைச்சரவை உறுப்பினர்களே அவருக்கு எதிராக போர்க்கொடியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Related Link
அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி

அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெளி மாநிலம் செல்லும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தேவை

0
5 mins agoshare
ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau