news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி
tv

Also Watch

tv

Read this

அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி

அல்பேனியா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெப்ப ஏரி

138.3 மீட்டர் நீளமும், 42 மீட்டர் அகலமும் கொண்ட ஏரி :

அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42 மீட்டர் அகலமும் கொண்டது என்றும் 345 மீட்டர் சுற்றளவு கொண்டது எனவும் கூறப்படுகிறது.

மேலும் இது 8 ஆயிரத்து 335 மீட்டர் வெப்ப கனிம நீரைக் கொண்டுள்ளதாகவும் இது ஒரு அசாதாரண இயற்கை அதிசயம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஏரியை முதன் முதலில் 2021-ம் ஆண்டு செக் குடியரசின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் அதன் முழு அளவை மதிப்பிடுவதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில், தற்போது 3D ஸ்கேனர்களுடன்விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியத் துணைத் தூதரகம் சார்பில் யோகா தினம் :

சீனாவின் ஷாங்காயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் சார்பில் 12-வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டப்பட்டது. "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற கருப்பொருளின் கீழ் பண்ட் ஃபைனான்ஸ் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தூதரக அதிகாரிகள், கல்வியாளர்கள், யோகா பயிற்சியாளர்கள், சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் என மொத்தம் 400 பேர் பங்கேற்றனர்.

மனதை இலகுவாக்கும் வகையில் மெல்லிய இசையுடன் யோகா பயிற்சி நடந்தது.

மேற்கு ஆசிய போரை நிறுத்த இடைக்கால ஒப்பந்தம்? 

அமெரிக்கா-ஈரான் மற்றும் இஸ்ரேல்-லெபனான் இடையிலான போரை நிறுத்துவதை நோக்கமாக கொண்ட இடைக்கால ஒப்பந்தம் குறித்து அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்படிஹோர்மூஸ் நீரிணை 60 நாட்களுக்கு கட்டணமில்லா பயணத்திற்காகத் திறந்திருக்க வேண்டும் என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஹோர்மூஸ் நீரிணை மீது வரிகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆனால் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை காரணம் காட்டி ஹோர்மூஸ் நீரினையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதால் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Link
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெளி மாநிலம் செல்லும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தேவை

0
6 mins agoshare
ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau