Also Watch
Read this
By: Manigandan Raja

அடையாளம் தெரியாத நபர் உடல் சிதறி உயிரிழப்பு :
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில் அடையாளம் தெரியாத நபர் உடல் சிதறி உயிரிழந்தார். பதங்க்பேட் ((Badangpet)) பகுதியில் விபத்து நடைபெற்ற 10 மீட்டர் தூரத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது. மர்ம பொருள் குறித்தும், விபத்துக்கு காரணமான நபர்கள் குறித்தும் ஹைதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெரு நாய் :

கேரளாவில் சமீப நாட்களாக தெரு நாய் கடிகள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஓய்ந்து உள்ளது இந்த நிலையில் மீண்டும் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு சங்கரம் குளம் பகுதியில் அதிகரித்துள்ளது அதேபோல சேர்ந்த 6வயதான சிறுவன் தனது வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் சிறுவனை கடித்துள்ளது.
உடனடியாக சிறுவனின் சகோதரன் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து சிறுவனை காப்பாற்றியுள்ளான் அந்த சிறுவனின் சகோதரன் துரத்தியபோது சகோதரனையும் கடித்து உள்ளது இந்த காட்சிகள் அந்த வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான நிலையில் தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து அந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி மோதி விபத்து :

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி இருசக்கர வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நண்பர்களுடன் யோகா பயிற்சிக்கு காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், காரை ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.