Also Watch
Read this
By: Manigandan Raja

இரண்டே நாட்களில் ரூ.28 கோடி வசூலித்திருப்பதாக தகவல் :
நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள எங்கள் தங்கம் திரைப்படம், வெளியான இரண்டே நாட்களில் 28 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மா இன்டி பங்காரம்’ படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியான நிலையில், முதல் நாளிலேயே 13 கோடி வசூலித்தது.
வரும் 10-ம் தேதி வெளியாகும் இதயம் முரளி திரைப்படம் :

இதயம் முரளி திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ஃபகத் ஃபாசில் நிறைவு செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாகிறது.
இம்மார்ட்டல் படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது:

ஜி.வி.பிரகாஷ்- கயாடு லோகர் இணைந்து நடிக்கும் இம்மார்ட்டல் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக் களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் லவ் யூ காட்டேரி என தொடங்கும் முதல் பாடல் இன்று வெளியாகிறது.