Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பா மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள்ல கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கு. இந்த நிலையில அடுத்த 6 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு பற்றி பார்க்கலாம்.
24-ஆம் தேதிய பொருத்த வரையில தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துல லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கு. அதுவே 25-ஆம் தேதி தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுது.
26ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கு. இதைத்தொடர்ந்து 27ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், 28ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கு.
அடுத்ததாக 29-ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்னு சொல்லப்பட்டு இருக்கு. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை அலர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கு.
குறிப்பாக ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்னு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.