Also Watch
Read this
வரும் 26ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் கணித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;
சுமார் 5.8 கிமீ உயரத்தில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

ஜூன் 24
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 25
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை

ஜூன் 26
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன் 27
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
கன்னியாகுமரி
மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன் 28
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
கன்னியாகுமரி
மதுரை
விருதுநகர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

ஜூன் 29
நீலகிரி
கோயம்புத்தூர்
தேனி
விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வரும் 27ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.