Also Watch
Read this
By: Manigandan Raja

ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்ததற்காக 4 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் :
விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான மார்கெட்டா வோண்ட்ரூசோவா, ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்ததற்காக நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். ஹலேப், ஜானிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோருக்கு பிறகு, ஊக்கமருந்து வழக்கில் சிக்கிய பிரபல டென்னிஸ் வீராங்கனையாக வோண்ட்ரூசோவா ஆகியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி :

தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த கேப்டன் எம்.எஸ். தோனி தான் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆர்ச்சர் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், களத்தில் விரைவாகச் செயல்படும் விதமும், நெருக்கடியான சூழலில் முடிவுகளை எடுக்கும் திறனும் மிகச் சில கேப்டன்களிடமே பார்த்திருப்பதாகவும், களத்தில் தோனி இருப்பதாலே எதிரணி வீரர்களுக்கு ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது எனவும் கூறினார்.
சிஎஸ்கே தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங் தொடர்வார் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங் தொடர்வார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 3 சீசன்களாக சென்னை அணி தடுமாற்றத்தை சந்தித்து தொடர் தோல்வியை அடைந்து வருகிறது.
இதனிடையே பயற்சியாளர் மாற்றப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மீண்டும் ஒரு ஆண்டு ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.