Also Watch
Read this
By: Web Team

அண்மை காலமாக சர்ச்சையில் சிக்கியுள்ள ரவிமோகன் மீது இன்னொரு குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமான ரவி மோகன் தொடர்ந்து சில வெற்றி படங்களை தந்து முன்னணி நடிகராக உள்ளார். தற்போது தனியாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையே தனது மனைவி ஆர்த்தியை பிரிந்த ரவிமோகன், விவாகரத்து கோரி வழக்கும் தாக்கல் செய்துள்ளார். ஆனால், ரவிமோகனின் இந்த முடிவுக்கு பிரபல பாடகி தான் காரணம் என ஆர்த்தி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. சமூக வலைதளங்களிலும் பதிவுகள் வெளியாகி சர்ச்சையாகின.
இந்த சர்ச்சையால் தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க போவதில்லை என ரவிமோகன் வீடியோ வெளியிட்டார். இப்படி அடிக்கடி சர்சையில் சிக்கி கொள்ளும் ரவிமோகன், இன்னொரு புகாரில் சிக்கியுள்ளார். அதாவது திருடி விட்டதாகக்கூறி, சிறுவனுடன் சேர்த்து வீட்டு பணிப்பெண்கள் இருவரை நடிகர் ரவிமோகன் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சிறைபிடித்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
ரவிமோகனின் வீட்டுக்கு சென்ற பணிப்பெண்கள் வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்கள் புகாரளித்த நிலையில் பணிப்பெண்களை மீட்ட போலீசார், காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ரவி மோகனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.