Also Watch
Read this
By: Web Team

வளைகுடா நாடுகளின் மோதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்த சூழலில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக இ-வாகனங்களின் பயன்பாடும் விற்பனையும் அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆம்பியர் (Ampere) நிறுவனம் தற்போது புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
ஆம்பியர் ரியோ விஒய்பி (Ampere Reo VYB) என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. வார்ம் ஒயிட், பர்ப்பிள், டார்க் க்ரே, மெட்டாலிக் என 4 நிறங்களில் வந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எல்.இ.டி. லைட்ஸ், எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் மோட் மோன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
1.44 kWh LFP பேட்டரி மற்றும் முன்பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ச் செய்தால் 80 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை என்றும், ஆர்டிஓவில் பதிவு செய்ய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதுமாக பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ச் செய்தால் தொடர்ந்து 5 மணி நேரம் வரை இயக்க முடியும். யூசர் ஃபிரண்ட்லியாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.64,900 மட்டுமே என கூறப்படுகிறது.