Also Watch
Read this
By: Manigandan Raja

ரஸ் லஃப்பான் தொழிற்சாலை விபத்தில் 12 இந்தியர்கள் பலி :
கத்தாரில் உள்ள ரஸ் லஃப்பான் ((Ras Laffan)) தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 12 இந்தியர்களின் குடும்பத்துக்கு தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க கத்தார் அதிகாரிகளுடன் தூதரகம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்கோலிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்ஷங்கர் சந்திப்பு :

மங்கோலியா நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், இரு நாடுகளுக்கிடையேயான வணிக ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேசிய ஜெய்ஷங்கர், மங்கோலியாவுடனா ஆலோசனை மிகவும் சுமூகமான மற்றும் வெளிப்படையாக இருந்ததாக கூறினார்.
பயங்கரவாதத்திற்கு உதவும் வகையில் இருக்காது-ஜே.டி.வான்ஸ்
ஈரானின் சொத்துக்கள் விடுவிக்கப்பட்டால், அது பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படாமல் மக்களுக்கு உதவும் வகையில் செலவிடப்படுவதை தங்களால் உறுதி செய்ய முடியும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்((jd vance)) கூறினார். ஈரான் நிதியை விடுவிக்கும் திட்டம், அமெரிக்க விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றும், அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் ஜே.டி.வான்ஸ் கூறினார்.