Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அதிகாலை தனியார் பேருந்து கழுவும் பணிக்காக சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது தூத்துக்குடி பகுதியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி மீமிசல் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சிவனேசன் என்பவர் ஓட்டி சென்ற லாரி முன்னே சென்ற வாகனத்தை முந்த சென்றபோது எதிரே சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் பேருந்து முன் பகுதி முற்றிலும் சேதமாகி சாலையோரம் இருந்த குளத்தில் கவிழும் நிலையில் அந்தரத்தில் நின்றது இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிவனேசன் காயத்துடன் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனியார் பேருந்தில் பயணிகள் மற்றும் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.