Also Watch
Read this
By: Manigandan Raja

நான்காம் படைவீடான சுவாமி மலை :
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக விளங்குவது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் தந்தை சிவபெருமானுக்கு, ஓம் எனும் பிரணவம் மந்திர பொருளை குருவாக இருந்து முருகப்பெருமான் உபதேசம் செய்த தலம் . இத்தலம் முருகன் சாமிக்கு நாதன் ஆனதால் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார்.
இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் கடந்த 24 ஆம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடைபெறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திரு தேரோட்டம் இன்று காலை சித்திரை விசாகம் நட்சத்திரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு.
சிறப்பு மலர் அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என பக்தி முழக்கங்களுடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்க திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது.