Also Watch
Read this
By: Manigandan Raja

சிகரெட் கையிருப்பு இல்லை :
சேலம் அம்மாபேட்டை, காமராஜர் வளைவு பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் குமார். இவரின் கடைக்கு நேற்று இரவு வந்த போதை கும்பல் சிகரெட் கேட்டபோது, கையிருப்பு இல்லை என உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை அடிக்க துரத்தியதில், அவர் உயிருக்கு பயந்து அருகில் உள்ள பழனியாண்டி மருத்துவமனைக்குள் நுழைந்தார்.
விடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற கும்பல் மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து அவரைத் தாக்கியுள்ளது. பலத்த காயம் அடைந்த அவர் பழனியாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிகரெட் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட கும்பலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.