news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality 12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்
tv

Also Watch

tv

Read this

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

வினைகளை நீக்கும் விநாயகர்

2

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
temple

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியில் உள்ளம் குளிர்ந்த பக்தர்கள் மனம் உருகி வழிபட்டனர். 

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது. இதைடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 22 ஆம் தேதி அதிகாலை யாகசால பூஜையுடன் தொடங்கியது.

கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசால பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை
சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று கோயிலை சுற்றி விமான கும்பத்தை அடைந்து, கோயில் கோபுரம் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். 

பின்னர் மூலவரான விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இறுதியாக பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேசினாலும் பிரச்சனை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை என ரஜினி கலகலப்பு

10
7 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau