Also Watch
Read this
By: Web Team

Red Alert: பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் 10ம் தேதி தொடங்க இருந்த தென்மேற்கு பருவமழை இந்த முறை தள்ளி போனது. இதன் காரணமாக மும்பையில் கனமழை கொட்டியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மும்பை மற்றும் பால்கர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தானே மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட்டும், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளன.
மும்பையில் தொடர்ந்து 3 நாட்களாக கனமழை கொட்டி வருவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.