news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

சென்னை நிலவரம் எப்படி?

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் 26ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் கணித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;
சுமார் 5.8 கிமீ உயரத்தில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இன்று ஜூன் 24
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ஜூன் 25
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை

ஜூன் 26
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன் 27
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
கன்னியாகுமரி
மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன் 28
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நீலகிரி
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
தேனி
தென்காசி
கன்னியாகுமரி
மதுரை
விருதுநகர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

ஜூன் 29
நீலகிரி
கோயம்புத்தூர்
தேனி
விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Related Link
ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 21 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau