news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ”நான் பேசினாலே பிராப்ளம்தான்” - வெறுத்து பேசிய ரஜினி
tv

Also Watch

tv

Read this

”நான் பேசினாலே பிராப்ளம்தான்” - வெறுத்து பேசிய ரஜினி

வாயில் என்ன கொழுக்கட்டையா

3

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
240626-LIVE-THAIVAR-173-MOVIE-EVENT-LAPTOP

எம்பி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. தர்மன் என பெயரிடப்பட்ட படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்தில் ரஜினியுடன் சேர்ந்து சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் டைட்டிலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினி, நான் பேசனாலே பிராப்ளம். ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும். இல்லனா மத்தவங்களுக்கு பிராப்ளம் வரும். நான் பேசாம இருந்தால் சும்மா இருப்பதாக, வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சி இருக்காருன்னு கிண்டல் செய்வார்கள். பேசினால், இதோ பேசிட்டாரு என்று சொல்வார்கள். என்ன பண்றது.


ரொம்ப நாளுக்கு பிறகு நான் ஒன்னு தெரிஞ்சிக்கிட்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம என்ன பண்ணாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம என்ன பண்ணாலும் பிடிக்கும் என்று நம்புவது ரொம்பவே முட்டாள்தனம். அதனால ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று எதையோ பொடிவைத்து பேசியுள்ளார்.


தொடர்ந்து, முதலில் நான் கதையை கேட்கவில்லை. நீங்களே கேட்டு சொல்லுங்கள் என்று கமல் என்னுடன் சொன்னார். படத்தின் எல்லா பொறுப்புகளையும் என்னிடமே கமல் விட்டு விட்டார். இந்த படத்தில் அஸ்வத்திற்கு பெரிய பொறுப்பு இருக்கு. இது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கும் என பேசினார்.

மேலும் கமலுடனான தனது நட்பை பற்றி பேசிய ரஜினி, 1975களில் கமல் பெரிய ஸ்டார் நடிகர். அப்போதுதான் நான் சினிமாவுக்கு வதேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமலால்தான் நான் நடித்தேன் என்று பழைய கதைகளை நினைவு கூர்ந்து பேசினார்.

Related Link
பேசினாலும் பிரச்சனை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை என ரஜினி கலகலப்பு

பேசினாலும் பிரச்சனை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை என ரஜினி கலகலப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

5
20 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau