Also Watch
Read this
By: Web Team

ரெட்மி நிறுவனம் தனது புதிய Redmi K90 Ultra ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வருகிறது, அதன் சிறப்பம்சம் என்ன விலை என்ன என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
ஜியோமி ரெட்மி நிறுவனம் தனது அடுத்த அப்டேட்களுடன் கூடிய புதிய Redmi K90 Ultra மாடல் ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல் ஜூன் 30ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும், இந்த விலை சுமார் ரூ.41,905 ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். இதன் ஓஎல்இடி டிஸ்ப்ளே 6.8 இன்ச்சுடன் 4500 நிட்ஸ் பிரைட்னஸுடன் கூடிய சிறந்த பாதுகாப்பு மற்றும் திரை ஃபீல் கொடுக்கும் வசதியை கொண்டுள்ளது.

50எம்பி மெயின் கேமராவுடன் அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அம்சங்களும் இருப்பதால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அசத்தலாக எடுக்க முடியும். இதனுடன் சேர்த்து 20எம்பி செல்பி கேமரா அம்சமும் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக 12GB RAM, 256GB Memory மற்றும் 16GB RAM, 512GB Memory என இரண்டு வேரியண்டுகளில் Redmi K90 Ultra ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இதனுடன் 8500mAh பேட்டரி திறன் இருப்பதால் நீண்ட நேரம் பேட்டரி பேக்கம் வழங்கும். பேட்டரி 100W Fast சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளதால் சீக்கிரமாக சார்ச் ஆகிவிடும். மேலும் வைஃபை, ப்ளூடூத், அடாப்டர் கனெக்டிவிட்டி அம்சங்களுடன் இருப்பதால் Redmi K90 Ultra ஸ்மார்ட்போன் சந்தையில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருக்கு. விரைவில் இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி இந்திய சந்தையில் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் சில சலுகைகளுடன் கூடிய ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதில் கிரெட் கார்டு, டெபிட் கார்டுகளின் மதிப்புக்கு ஏற்றவாறு குறைந்த விலையில் புடித்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.