news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews புது டிரெண்டாகும் Snake Wine - கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கே
tv

Also Watch

tv

Read this

புது டிரெண்டாகும் Snake Wine - கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கே

ஆண்மை அதிகரிக்கும்

2

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
snake wine

மது குடிக்கும் பழக்கம் இருக்கும் பலரும் மதுவில் பிடித்த சில பொருட்களை கலந்து குடிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, இதையெல்லாம் கூடவா கலந்து மது குடிக்கிறாங்க? என்ற கேள்விய தான் அண்மையில் வைரலான வீடியோ ஏற்படுத்தியிருக்கு. இப்படியும் நடக்குமா என கேட்கும் அளவுக்கு டிரெண்டாகும் Snake Wine பற்றி பார்க்கலாம்

நமது நாட்டில் சமைத்த காய்கறிகளையும், இறைச்சி, மீன் போன்ற உணவையும் சாப்பிடுகிறோம் என்றால் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பாம்பு, தவளை, பூச்சிகளை சாப்பிடுவது சர்வசாதாரணமானது. ஆனால், இதையும் தாண்டி போதைக்காக பாம்புகளை மதுவில் பயன்படுத்தும் நடைமுறையும் அந்த நாடுகளில் இருக்கு.

சீனா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் பாரம்பரிய ஒயின்க்கு ரொம்பவே வரவேற்பு அதிகம். இதற்கு காரணம் பாம்புகள்தான். அதிக விஷம் கொண்ட நாக பாம்புகளை உயிருடன் கண்ணாடி ஜாடிகளில் போட்டு, அதில் அரிசி மது அல்லது திராட்சை மது ஊற்றி மாதக்கணக்கிலோ அல்லது வருடக் கணக்கிலோ ஊற வைத்து, புளிக்க செய்து ஒயின் தயாரிக்கப்படுது. ஜாடிகளில் இருக்கும் பாம்புகள் கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் ஃபார்மால்டிஹடு என்ற ரசாயனமும் பயன்படுத்தப்படுவதுதான்.

இதையும் படியுங்கள்:https://newstamil.tv/article/worldnews/el-nino-is-a-natural-climate-phenomenon-in-which-sea-surface

விஷம் கக்கும் பாம்புகளில் மது தயாரித்தால் அதுவும் விஷமாகுமா என்ற கேள்வி எழலாம். ஆனால், இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பாம்பின் விஷம் புரதத்தை கொண்டது. அதனுடன், எத்தனால் கொண்ட மதுவை சேர்க்கும்போது, புரதத்தின் தன்மையை நீக்கிவிடுமாம். இதனால் பாம்பின் விஷம் நீங்கிவிடுகிறது. அதுக்கப்பறம் பல நாட்களாக பதப்படுத்தப்பட்ட Snake Wine-ல் பாம்பின் விஷம் இருக்காது என்று சொல்றாங்க.

இப்படி தயாரிக்கப்படும் Snake Win, உடல்நல பிரச்சனைக்கு மருந்தாக பார்க்கப்படுகிறது. மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றிற்கும், உடல் பலமாக இருக்கவும் Snake Wine-ஐ சிலர் தேடி வந்து வாங்குகின்றனர். இதுக்கும் மேல், Snake Wine குடித்தால் ஆண்மை அதிகரிக்கும், பாலியல் உணர்வும் தூண்டப்படும் என்று சொல்லப்பட்டது. இதனால் பெரும்பாலான ஆண்களின் விருப்பமாக Snake Wine இருக்கிறதாம்.

ஆபத்தான Snake Wine -ஐ சரியான முறையில் தயாரித்தால் மட்டுமே அது ஒரு உணவாகும். ஒருவேள ஜாடிகளில் இருக்கும் பாம்பு சாகாமல் இருந்தாலோ அல்லது நச்சுத்தன்மை இருந்தாலோ அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது.

Related Link
புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இப்படியா?

புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இப்படியா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிக அதிக கனமழை கொட்ட போகுது - ரெட் அலர்ட் தந்த வானிலை

1
1 min agoshare
rain red alert








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau