news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்
tv

Also Watch

tv

Read this

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

உலகத்துக்கு புதிய எச்சரிக்கை!

2

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
courtesy image

Courtesy Image

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் Sentinel-6 செயற்கைக்கோள் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்திற்கும் உலகளாவிய காலநிலையில் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுவதற்கு எல்நினோ காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதாவது பசுபிக் பெருங்கடலின் நடுப்பகுதியிலும், கிழக்கு பகுதி கடலின் மேற்பரப்பு பகுதிகளிலும் வழக்கத்தை விட வெப்பநிலை இயல்பை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான பருவநிலை நிகழ்வாகும். இது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டு, கடுமையான வறட்சி அல்லது அதிக மழை போன்ற பேரிடர் நிகழ்வுகள் உருவாகின்றன.

இதையும் படியுங்கள்: https://newstamil.tv/article/worldnews/us-president-trump-warned-iran

கடந்த 1997-98 காலகட்டத்தில் ஏற்பட்ட மிக வலுவான எல் நினோவால் உலகின் பல நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு, வறட்சி, வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற ஒரு பேரிடர் மீண்டும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

குறிப்பாக சில பகுதிகலில் அதிக மழையும், பெருவெள்ளமும் ஏற்படலாம் சில பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு கடல் உயிரினங்களின் வாழ்வியலே பாதிக்கப்படலாம். வெப்பநிலை அதிகரித்தால் கடுமையான வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் ஏற்படலாம். தற்போது சூப்பர் எல் நினோ உருவாக வாய்ப்பு இருப்பதால் பசுபிக் பெருங்கடலில் வேகமான மாற்றங்கள் ஏற்படும் என்றும், உலக நாடுகளின் காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்பை தரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இதனால் உலக நாடுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Related Link
முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா..

முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரவிமோகன் வீட்டில் வைர நெக்லஸ் காணாமல் போனதா?

2
20 mins agoshare
ravi mohan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau