Also Watch
Read this
By: Web Team

நடிகர் ரவிமோகன் தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை சிறைபிடித்து வைத்திருந்ததாக எழுந்த புகாரில், அவரது வீட்டில் வைர நெக்லஸ், பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம், சேஷாத்ரி அவென்யூ பகுதியில் நடிகர் ரவி மோகன் வசித்து வருகிறார். ரவிமோகன் வீட்டில் ஈஞ்சம்பாக்கம் பாரத் அவென்யூ பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளார். சிவக்குமாரின் மனைவி அலமேலு, மகன் வசந்த் தோட்ட வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் ரவிமோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு
வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் ரூ.40,000 பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனது வீட்டில் தோட்ட வேலை செய்த அலமேலு மற்றும் அவரது மகனிடம் விசாரித்துள்ளார். நகை, பணம் காணாமல் போனது குறித்து தங்களுக்கு தெரியாது என்று அலமேலு கூறியதாக கூறப்படுகிறது. இரவு 8 மணி ஆகியும் மனைவி அலமேலு, மகன் வசந்த் இருவரும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த கணவர் சிவக்குமார், ரவிமோகன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.
அப்போது அலமேலுவும், அவரது மகனும் வீட்டில் இருந்து வைர நெக்லஸ் மற்றும் பணத்தை திருடியுள்ளதால் அது குறித்து நடிகர் ரவிமோகன் விசாரித்து வருவதாகவும், வீட்டிற்கு வர நேரம் ஆகும் என்று நடிகர் ரவிமோகன் வீட்டில் இருந்து ஒருவர் வந்து சிவக்குமாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான சிவக்குமார், காவல் கட்டுப்பாட்டு அறையான 100-க்கு தொடர்பு கொண்டு தங்களது மனைவி மற்றும் மகனை நடிகர் ரவி மோகன் வீட்டில் அடைத்து வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் நடிகர் ரவி மோகன் வீட்டிற்கு சென்று வெளியே இருந்த கணவர் சிவகுமாரிடம் விசாரணை செய்துள்ளனர். பின்னர் போலீசார் ரவி மோகன் வீட்டிற்குள் சென்ற போலீசார், அலமேலு, அவரது மகன் வசந்த் ஆகியோர் குறித்து கேட்டுள்ளனர். அப்போது, நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து இருவரிடமும் விசாரித்து வருவதாக ரவிமோகன் தரப்பில் கூறப்பட்டு இருக்கு. இதனால் ஆத்திரமடைந்த போலீசார், 6 மணிக்கு மேல் நாங்களே காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ய மாட்டோம், நீங்கள் வீட்டில் வைத்து விசாரணை செய்து சட்டப்படி குற்றம் என்று கூறியதும் இருவரையும் ரவிமோகன் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரவி மோகனின் தனி மேலாளர் கோகுல் நீலாங்கரை காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ரவி மோகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டில் வேலை பார்த்தவர்கள் திருடிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.