Also Watch
Read this
By: Web Team

முதலமைச்சர் விஜய்க்காக நள்ளிரவில் கேக் வெட்டிய த்ரிஷாவின் புகைப்படம் வைரலானது.
கடந்த ஜூன் 22ம் தேதி தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்த த்ரிஷா, இந்த ஆண்டு எந்த வாழ்த்து பதிவையும் போடவில்லை. த்ரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படியுங்கள்: https://newstamil.tv/article/justnownews/rajini-did-not-congratulate-vijay-why
இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை நடிகை திரிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது 52வது பிறந்தநாளை முதலமைச்சர் திங்கட்கிழமை கொண்டாடிய நிலையில், அன்றைய தினம் சரியாக நள்ளிரவு
12 மணிக்கு 5 கேக்குகளை வெட்டி தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த த்ரிஷா, எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.