Also Watch
Read this
By: Web Team

Represented Image
உலக நாடுகள் பங்கேற்கும் ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும் வீரர்கள் ஒவ்வொரு நாளும் ஃபிஃபா போட்டியை சிறப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் திடலில் நடந்த குரூப் கே பிரிவுக்கான லீக் சுற்றின் 47வது ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் நட்சத்திர வீரரான ரொனால்டோ முதல் கோல் அடித்து அணியை 1-0 என்ற முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து 39வது நிமிடத்தில் மறுபடியும் இன்னொரு கோலை அடித்த ரொனால்டோவால் முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ரஃபேல் லியோ மற்றும் நெமடோவ் அடுத்தடுத்த கோல்களை அடித்ததால் போட்டியின் முடிவில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. வயது 41-ஐ நெருங்கிய நிலையிலும் தனது அபாரமான கோல் வேட்டையை தொடர்ந்து வரும் ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் 6 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved