Also Watch
Read this
By: Manigandan Raja

குவிந்த சுற்றுலாப் பயணிகள் :
நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டும் சமவெளி பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருவதை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வரத்து வாங்கியுள்ளனர்.
குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பசுமையான புல்வெளியில் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஓய்வு எடுத்தும் உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவித்தும் கொடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.