Also Watch
Read this
By: Manigandan Raja

2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பிரதான சாலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் இங்குள்ள முக்கிய நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
குறிப்பாக மூஞ்சிக்கல் ,ஏரிச்சாலை, அப்சர்வேற்றி, பாம்பார் புறம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருசலாக காணப்படுகிறது. தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் முக்கிய சாலைகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை பணியில் அமைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்து வருகிறது.