தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் தாலூகா பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

மேட்டுப்பாளையம் தாலூகா பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசு அறிவித்த "உங்களை தேடி உங்கள்
ஊரில்" திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று
காலை முதல் மேட்டுப்பாளையம் தாலூக்காவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு
நேரில் ஆய்வு செய்தார்..மேட்டுப்பாளையம் காவல்நிலையம், உணவு பொருள் வாணிப
கழகம், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடைகள் என பல
இடங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியதோடு மேட்டுப்பாளையம் நகராட்சி
அலுவலகத்தில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று
கொண்டார்..மேலும் இரவு எட்டு மணியளவில் பழைய கட்டிடங்களை இடித்து புதிதாக
கட்டப்படவுள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை ஆய்வு
செய்தார்..முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட ரூபாய் 8 கோடி செலவில் இடக்கப்படும்
பேருந்து நிலைய பகுதிகளை பார்வையிட்ட ஆட்சியர் இதற்கான மாற்று ஏற்பாடுகள்
குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தார்..இன்று காலையில் துவக்கிய ஆய்வு
பணிகளை முடித்து விட்டு மேட்டுப்பாளையத்திலேயே தங்கும் ஆட்சியர் நாளை அதிகாலை
மீண்டும் தனது ஆய்வு பணிகளை துவக்கவுள்ளார்..

00 Comments

Leave a comment