Also Watch
Read this
By: Manigandan Raja

மகா சிவராத்திரி திருவிழா :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரண்மனைப்பட்டியில் ஸ்ரீ குருந்துடைய அய்யனார் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 65 ஆம் ஆண்டு
ஊர் பொதுமக்கள் இளைஞர்களால் நடத்தப்படும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டியில் 9 ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 19 ஜோடிகளும் கலந்து கொண்டனர். பெரிய மாட்டு வண்டிக்கு போகவர 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு போகவர 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டியான நடைபெற்றது.
சாலையில் துள்ளிக்குதித்து போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிக்கும் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved