news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா
tv

Also Watch

tv

Read this

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

வெள்ளலூர், மதுரை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu vetrilai

வெற்றிலை பிரி திருவிழா : 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, மலம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி உள்ளிட்ட 5 மாகாணங்களில் உள்ள 62 கிராமங்களை வெள்ளலூர் நாடு என அழைக்கப்படுகின்றது.

இங்கு மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் வளமுடன் வாழ வேண்டி பாரம்பரியமாக நடைபெற்று வரும் "வெற்றிலை பிரி திருவிழா", வெள்ளலூரில் உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் பெரிய மந்தையில் கிராம அம்பலகாரர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதற்காக, ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் முதல்நாளில் நடைபெறும் இந்த விழாவையொட்டி வெள்ளலூர், உறங்கான்பட்டி, மலம்பட்டி, குறிச்சிபட்டி, உள்ளிட்ட 5-மாகாணங்களில் உள்ள 62 கிராமத்தைச் சேர்ந்த அம்பலகாரர்.

இளங்கச்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என அனைவரும் வெள்ளலூரில் உள்ள பெரிய மந்தையில் பாரம்பரிய முறைப்படி ஒன்றுகூடி. கிராமத்தின் சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை, பாக்கு, ஆகியவற்றை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

பின்பு, அவற்றை கிராம அம்பலகாரர்கள், மந்தையில் கூடியுள்ள அனைத்து மக்களுக்கும் பிரித்து வழங்கினர், இதனைத்தொடர்ந்து வெற்றிலையை பெற்றுக்கொண்டு செல்லும் பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் விளைநிலங்களில் சென்று ஏர்கலப்பை, மண்வெட்டி, உள்ளிட்ட விவசாய பொருட்களை வைத்து சாமி கும்பிட்டு நிலத்தில் உழவுசெய்தல் போன்ற விவசாயப் பணிகளை துவங்குகின்றனர்.

இதனால் தங்கள் பகுதி மழைவளம் பெருகி, விவசாயம் செழித்து, வளம் பெருகுவதாக கூறும் இக்கிராம மக்கள். காலம்காலமாக நமது பாரம்பரியத்தை காத்து, விவசாயம் செழித்து வளம்பெறுவதோடு.
மட்டுமல்லாமல் சமுதாய ஒற்றுமை மேலோங்கும் விழாவாகவும் இந்த "வெற்றிலை பிரி திருவிழா" இருப்பதாக கூறுகின்றனர்.

Related Link
மீனவர் வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன்

மீனவர் வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026, 82 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

1
3 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved