news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கோபி நயினார் இயக்கும் படத்திற்கு காலணி என பெயர்
tv

Also Watch

tv

Read this

கோபி நயினார் இயக்கும் படத்திற்கு காலணி என பெயர்

காலணி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா இரங்கல் :

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா இரங்கல் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஷா போஸ்லேவின் புகைப்படத்தை ஜான் சீனா பகிர்ந்துள்ள நிலையில், ஆஷாவின் புகழ் எல்லை கடந்து பரவி உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜனநாயகன் படம் தவெகவின் 3 மணி நேர பிரச்சாரம் என விமர்சனம் :

இணையத்தில் கசிந்த நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பார்த்ததாக, நடிகை கஸ்தூரி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படம் தவெகவின் 3 மணி நேர பிரச்சாரம் என்றும், இதனை மக்கள் பார்ப்பது தவெகவிற்கு மட்டுமே சாதகமாக அமையும், மாறாக படத்தை கசியவிட்டதாக விஜய் குற்றம்சாட்டும் பாஜகவுக்கோ, திமுகவுக்கோ சாதகமாக அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கோபி நயினார் இயக்கும் படத்திற்கு காலணி என பெயர் :

தாய் கிழவி திரைப்படத்தின் ப்ளாக் பிளஸ்டர் வெற்றியை தொடர்ந்து ராதிகா சரத்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு காலணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறம் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கோபி நயினார் இப்படத்தை இயக்குகிறார். தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கிறார்.

இறுதி கட்டத்தை நெருங்கிய மண்டாடி திரைப்படத்தின் பணிகள் :

மண்டாடி திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், விரைவில் இந்த படத்திற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என நடிகர் சூரி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் படக்குழு சார்பாக தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும்.

கடலில் நடக்கும் நிகழ்வை மையக் கருத்தாக வைத்து திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

Related Link
மறைந்த ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

மறைந்த ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
1 hr 0 min agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved