news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி
tv

Also Watch

tv

Read this

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி

பி.வி சிந்து

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பி.வி சிந்து

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டி :

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம்((An Se Young)) இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

பரபரப்பாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் 21-க்கு 17 மற்றும் 21-க்கு 14 என்ற புள்ளிக் கணக்கில் ஆன் சே யங் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு :

ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்கள வீரர்களாக மெஸ்ஸி , நிக்கோலஸ் ஆகியோர் உள்ளனர். கோல்கீப்பர்களாக எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி, ஜுவான் முஸ்ஸோ உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎலில் SMART SUN GLASS பயன்படுத்த வீரர்களுக்கு தடை :

ஐபிஎல் போட்டிகளின் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் SMART SUN GLASS பயன்படுத்தக் கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. பல தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த சாதனத்தில் WIFI மற்றும் MOBILE DATA-வை பயன்படுத்தி வீரர்கள் ஆடியோ, வீடியோ கால் மற்றும் நேரலை ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளதால் பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் பொது இடங்களில் கொண்டாட தடை :

நாளை IPL இறுதிப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, பெங்களூருவில் பொது இடங்களில் போட்டியை திரையிடவும், கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் பட்டாசு வெடிக்கவும் பேரணியாக திரளவும் தடை என பெங்களூரு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சாதனை :

ஐபிஎல் வரலாற்றில் பதினைந்து வயதிலேயே ஆயிரம் ரன்களை கடந்த வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 440 என்ற குறைவான பந்துகளில் 1000 ரன்களை கடந்த முதல் வீரராகவும் வரலாறு படைத்தார்.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளார்.

Related Link
ஆர்சிபி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர் பில் சால்ட்

ஆர்சிபி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர் பில் சால்ட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனை

0
5 mins agoshare
நேபாளம் மருத்துவமனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved