Also Watch
Read this
By: Manigandan Raja

காசோலையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் :
இந்தியாவில் முதல் முறையாக பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை உருவாக்கியுள்ள ஒரு தலைவராகத் திகழ்கிறார் விஜய் மின்னல் தாக்கி பலியான தம்பதி குடும்பத்திற்கு ரூ.8 இலட்சம் நிவாரணம்: நேரில் ஆறுதல் கூறி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னல் தாக்கி சுரேஷ் - மஞ்சுளா ஆகிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 4 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 8 இலட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவித்தொகையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்
கொளப்பலூர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்தத் துக்கத்தில் நானும் ஒருவனாக
இருந்து பங்கேற்கிறேன்.
இது போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வருவாய்த்துறையைப் பொறுத்தவரையில் அனைத்துப் பணிகளையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் குறிப்பாக இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இனி
வரும் காலங்களில் இல்லாத அளவிற்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுதான் எங்கள் துறையின் முக்கியக் கடமை.
அந்த நோக்கில் நாங்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரையில், ஒரு ஊழலற்ற நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற
வேண்டும் என்பதுதான் அவரது லட்சியப் பயணமாக உள்ளது.
அதை முழுமையாக நிறைவேற்றும் வகையில், நாங்கள் அனைவரும் மிகுந்த தெளிவோடு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் முதன்மை நோக்கம்.
இதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம். தமிழக முதலமைச்சர் அவர்கள், இந்தியாவில் முதல் முறையாக பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை உருவாக்கியுள்ள ஒரு
தலைவராகத் திகழ்கிறார்.
இரண்டே மாத காலத்தில் 36சதவீத வாக்குகளைப் பெறுகிற தனித்து நின்று செயல்பாடுகளை காட்டியுள்ள ஒரு முதலமைச்சர், இந்திய நாட்டின் வரலாற்றில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, இன்று தமிழக மக்கள் முழுமையாக இவரை நம்பியுள்ளனர்.
இவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்' என்ற உன்னத நோக்கில் வாக்களித்துள்ள தமிழக வாக்கப் பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved