Also Watch
Read this
By: Manigandan Raja

மின்சாதன பொருள்கள் சேதம் :
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்றில் உயர் மின் அழுத்த ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய காரணத்தினால் இன்று அதிகாலை சுமார் நான்கு மணி அளவில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஃபேன் ஃப்ரிட்ஜ் ஏசி உட்பட மின்சாதன எரிந்து சேதம் அடைந்துள்ளது.
அதேபோல் ஒருவர் வீட்டில் அதிக மின் அழுத்தம் காரணமாக தீப்பொறி ஏற்பட்டு வீட்டில் இருந்த பெட் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது அவரின் முயற்சியால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு அந்த வீட்டில் தண்ணீர் விட்டு தீயை அணைத்துள்ளனர்.
அதேபோல் அங்கு குடியிருக்கும் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த உயர் மின்னழுத்தம் காரணமாக மின்சார சாதனங்கள் பழுதடைந்ததற்கு தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பவானியில் ஏதாவது ஒரு மின்சார தேவை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தால் எந்த விதமான ரெஸ்பான்ஸ் இல்லை என்றும் போன் கூட எடுப்பதில்லை என்றும் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved