Also Watch
Read this

காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருந்த பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் பில் சால்ட், முழு உடற்தகுதி பெற்றுள்ளதால் வரும் 31ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
சால்ட் வருகை, பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம்
ஏப்ரல் 18ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, சால்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சால்ட் அணியில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தனது வெற்றிக்கு பெற்றோர் தான் காரணம் - வைபவ்
ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது தாய் மற்றும் தந்தை குறித்து உருக்கமாக பேசினார். பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பம் அடிமட்ட நிலையில் இருந்தபோது தனது தாய் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே உறங்கியதாகவும், தான் வெற்றி பெறுவேன் என்று, தந்தை மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் பேசினார். தான் பெறும் இந்த வெற்றி பெற்றோர் மூலமே சாத்தியமானது எனவும் வைபவ் கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மாற்றப்படுவதாக தகவல்
நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், கேப்டன் மற்றும் மூத்த வீரர்களின் மீது அணி நிர்வாகம் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அடுத்த சில வாரங்களில் நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் An Se Young இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். பரபரப்பாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 21-க்கு 17 மற்றும் 21-க்கு 14 என்ற புள்ளிக் கணக்கில் ஆன் சே யங் முன்னிலை பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved