Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாக்கு உட்பட்ட குளத்தூர் நாயக்கர்பட்டியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த அரசு மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அந்த அரசு மதுபான கடையை அகற்றினர்.
ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை அகட்டி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அதே பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை தலை
தூக்கி உள்ளது.
இது குறித்து கந்தர் கோட்டை காவல் நிலையத்தில் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை ஜோராக நடைபெற்ற வருகிறது.
இந்த சூழ்நிலையில் பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மது பிரியர்களால் அச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட அரசு மதுபான கடையை போன்று.
தற்போது கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனைகள் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதி பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved