news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனை
tv

Also Watch

tv

Read this

இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனை

மனாங், நேபாளம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம் மருத்துவமனை

கட்டிடத்திற்கு நேபாளத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது :

இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனை கட்டிடத்திற்கு நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. நெருங்கிய அண்டை நாடுகளாகிய இந்தியாவும் நேபாளமும், பரந்த அளவிலான மற்றும் பல்துறை சார்ந்த ஒத்துழைப்பில் ஈடுபட்டு வருகின்றன. நேபாளத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது.

அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் டிரோன் தாக்கி அழிப்பு :

ஹோர்முஸ் நீரணைக்கு அருகே அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் டிரோனை வீழ்த்துவதற்கு தனது புதிய அரஷ்-இ கமாங்கீர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தனது இராணுவ உள்கட்டமைப்புகள் மீது பல மாதங்களாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு சவால் விடும் திறனை ஈரான் இன்னும் தக்கவைத்துள்ளது.

நேபாளத்தில் 19-வது குடியரசு நாள் கொண்டாட்டம்  :

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 19-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேபாள ராணுவ அரங்கில் ஒரு சிறப்பு அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும், பாதுகாப்புப் படைகள் மற்றும் சிவில் அமைப்புகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானுடன் ஒரு சாத்தியமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டணமின்றி ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டதாகவும் வெளியான செய்திகளுக்கு, ஈரானிய ஊடகங்கள் மறுப்பு தெரிவித்தன.

ஒப்பந்தம் குறித்து இன்னும் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அவசர ஆலோசனை! 

ஈரான் போர் விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க வெள்ளை மாளிகையின் 'Situation Room'ல் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Link
சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமித்ஷா ஆய்வு

0
50 mins agoshare
அமித்ஷா ஆய்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved