jothimani
news
அழிவின் பாதையில் காங்கிரஸ் - ஜோதிமணி
ராகுலின் கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் துரோகம் செய்ய முடியாது - ஜோதிமணி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், எவ்வித கட்டுப்பாடும் இன்றி, தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என எந்தக் கட்சியும் நினைக்காது என்றும், ஆனால் அது காங்கிரஸ் கட்சியில் நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒரு சிலரின் சுயநலத்திற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப் பாதையில் செல்வதாக கூறியுள்ள ஜோதிமணி, மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு இருப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
