

ஆந்திர கடலோரத்தை ஆட்டுவித்த அர்னாப்
அர்னாப் புயலால் விசாகப்பட்டினம், காக்கிநாடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெரும் பாதிப்பை சந்தித்தது. கனமழையுடன் காற்றும் சுழன்றடித்ததால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து இழப்பு ஏற்பட்டுள்ளது.
அர்னாப் புயலால் ஒடிஷாவிலும் பாதிப்பு
ஒடிஷா மாநிலத்தின், கஞ்ஜம், கோபால்பூர், ராயகடா உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்னாப் புயல் மிகத் தீவிரமாக கரையை கடந்ததால் மக்கள் பாதிப்பை சந்தித்தனர்.
கரையை கடந்தது அர்னாப் புயல்
ஆந்திர மாநிலம் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையிலான கடல் பகுதியில் அர்னாப் புயல் கரையை கடந்துள்ளது. வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாகப் புயல் நகரும் நிலையில் காலை 11:30 மணிக்கு தீவிரப்புயலாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
கண் பகுதி கரை கடந்தது
அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 1-2 மணி நேரத்தில் புயலின் பின் பகுதியும் முழுமையாக கரையை கடக்கும் என்றும், அடுத்த 4 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.