தமிழ்நாடு

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சித்திரை திருவிழா கடந்த 19 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் கருப்பண்ணசாமி கோயில் முன் மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், துளசி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் கருப்பண்ணசாமி கோயில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பூப்பல்லக்கில் கள்ளழகர் மலையினை நோக்கி புறப்பட்டார்.
 

00 Comments

Leave a comment