தனுஷ் அரசியல்: முதல்வர் விஜய் போட்ட உத்தரவு

நடிகர் தனுஷோட அரசியல் எண்ட்ரி டெல்லியோட ஆசீர்வாதத்தோட தான் நடக்குதாம். இந்த மெகா புராஜெக்ட்டுக்காக கோவையில இருந்து நிதித் தேவை பூர்த்தி செய்யப்படுதாம். தனுஷ் கட்சி ஆரம்பிக்கறதுல முதல்வர் விஜய்யும் ரொம்பவே ஆர்வம் காட்டுறாராம்.
விஜய், தனுஷ்
Published on: 

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனுஷோட அரசியல் கட்சி தயாராகி விடும்னு அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்ல பேசிக்கறாங்க. தனுஷ் டெல்லிக்குப் போனதும், அதிமுகவோட டச்சுல இருக்காருங்கறதும் அரசியல் வட்டாரங்கள்ல பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கு. தனுஷோட சகோதரி ஏதோ ஒரு விவகாரத்துக்காக முன்னாள் முதல்வர் எடப்பாடியோட மகன் மிதுன்கிட்ட பேசியிருக்காராம். அது அரசியல் ரீதியாவா இல்லை வேற ஏதாவது விவகாரத்துக்காங்கறது இதுவரைக்கும் தெரியலை.

மகளிர் அணி
நடிகர் தனுஷ்நியூஸ்தமிழ்24x7

இன்னொரு பக்கம் டெல்லி பாஜக ஏதோ ஒரு வகையில தனுஷ் அரசியலுக்கு பின்புலமா இருக்குங்கற பேச்சு பரவலா பேசப்பட்டும் வருது. இப்போதைக்கு தனுஷோட அரசியலுக்கான செலவுகள் மொத்தத்தையும் கோவை பிரமுகர் ஒருத்தரை பார்த்துக்கச் சொல்லி டெல்லித் தலைமை உத்தரவு போட்டிருக்கறதாவும் ஒரு தகவல் அறிஞ்ச வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.

முக்கியமா தவெக ஆரம்பிக்கும் போது, ஆளும்கட்சியா இருந்த திமுக தவெகவை ஒரு பொருட்டாவே மதிக்காமலும் விமர்சனம் செய்யாமலும் இருந்துச்சு. 2026 தேர்தல்ல தவெக பத்துன எந்த விமர்சனத்தையும் திமுக மக்கள் முன்னால வைக்காம இருந்துச்சு. இப்போ ஆளும்கட்சியா இருக்கற தவெக, திமுக பாணியை கடைபிடிக்காதாம்.

NewsTamil Kazhugu
முதல்வர் விஜய் நியூஸ்தமிழ்24x7

தனுஷ் அரசியலுக்கு வர்றதை தவெகவும் அதோட தலைவரான விஜய்யும் விரும்புறாங்களாம். காரணம், தமிழ்நாட்டுல திமுக அதிமுக இல்லாம புதுப் போட்டியாளர்கள் தங்களுக்கு எதிரா இருக்கணும்னு தவெக நினைக்குதாம். தனுஷ் அரசியலைப் பத்தி ஆளும்கட்சி அமைச்சர்கள் விமர்சனம் செய்யலாம்ங்கற க்ரீன் சிக்னலையும் ஆளும்கட்சி வட்டம் கொடுத்துடுச்சாம்.

இனி திமுக அதிமுகவையும் தாண்டி தனுஷ் அரசியலை தவெக விமர்சிக்குமாம். இப்பவே அமைச்சர்கள், தவெக பிரமுகர்கள்னு பலரும் தனுஷ் அரசியலைப் பத்தி பேசத் துவங்கிட்டாங்க. ஆனாலும், தனுஷ் அரசியலுக்கு பின்னாடி யார் இருக்காங்க என்பதையும், எதை நோக்கி தனுஷ் அரசியல் போகும்ங்கறதையும் தவெக ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்ணுதாம்.

விஜய், தனுஷ்
விஜய் VS தனுஷ் ஒப்பீடு சரியா? என்ன ஆகும் அதிமுக, திமுக எதிர்காலம்?
newstamil.tv