22
22

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் இயக்குநர் கௌதம் மேனன்.. "தளபதி 69" திரைப்படத்தில் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

"தளபதி 69" திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படத்துக்கான நடிகர், நடிகைகள் குறித்த கேஸ்ட் ரிவீல் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
Published on: 

"தளபதி 69" திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த படத்துக்கான நடிகர், நடிகைகள் குறித்த கேஸ்ட் ரிவீல் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.

"தளபதி 69" படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

newstamil.tv