28
28

பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பு என பேசிய விவகாரம்.. இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும்

பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Published on: 

பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன் ஜாமின் வழங்க கோரி இயக்குனர் மோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வாய் சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் விளம்பரமாக வெளியிடவேண்டும் என மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.

முன்னதாக, இயக்குனர் மோகனுக்கு உண்மையிலேயே பழநி கோவில் மீது அக்கறை இருந்தால் பழநி கோவிலுக்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் என நிதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

newstamil.tv