cm
news
முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
காணொலி மூலம் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
"என் வாக்குச் சாவடி - வெற்றி வாக்குச்சாவடி" என்ற தலைப்பில் காணொலி வாயிலாக, திமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பகுதி செயலாளர்களும் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பாதி கிணறு தான் தாண்டியுள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியலை உன்னிப்பாக கவனித்து, அதில் வாக்காளர்கள் பெயர் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
