2
2

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் டி-20 போட்டி... 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.
Published on: 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.

இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

145 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.

newstamil.tv