23
news
"கொங்கு மண்டலத்தில் கூட கூட்டமும் இல்லை பருப்பும் வேகவில்லை"
அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொள்ளும் கொங்கு மண்டலத்தில் கூட கூட்டமும் இல்லை பருப்பும் வேகவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் விமர்சித்துள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கத்தின் கீழ் திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை அட்டையை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இபிஎஸ் என்ன சாதித்தார் என்பதே தெரியவில்லை என்றும் அவருக்கு அமித்ஷா இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.