திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமாண்ட புஷ்பயாகம் விமரிசையாக நடைபெற்றது. புஷ்பயாக நிகழ்வை முன்னிட்டு தமிழ்நாடு பக்தர்கள் ஐந்து டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களை தேவஸ்தானத்திற்கு வழங்கியிருந்தனர்,. அவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மலையப்ப சுவாமிக்கு சாற்றப்பட்டது.