kasmir
news
பாதுகாப்புபடை, பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சூடு
ஜம்மு-காஷ்மீரின், குப்வாராவில், பாதுகாப்பு படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது, 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின், குப்வாராவில், பாதுகாப்பு படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் கெரான் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக வந்த தகவலின் பேரில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளைக் கொண்ட ஒரு கூட்டுப் பணிக்குழு, ‘ஆபரேஷன் பிம்பிள்’ என்ற பெயரில் உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கியது. அப்போது, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் இருவர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகள் சிலர் இருக்ககூடும் என்பதால் தேடுதல்வேட்டை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
