தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமையன்று நவம்பர் 9ஆம் தேதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி
Published on: 

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு
தீபாவளி விடுமுறைநியூஸ்தமிழ்24x7

3 மணி நேரத்தில் ரூ.3 கோடி

ஆட்டு சந்தை
ரூ.3 கோடி நியூஸ்தமிழ்24x7

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனை நடைபெற்றதால், வியாபாரிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் விஜய்நியூஸ்தமிழ்24x7

ரூ.6.80 கோடி மதிப்பில் 40 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட SCHNEIDER ELECTRIC INDIA PRIVATE LIMITED நிறுவனத்துடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"நான் பார்த்துக் கொள்கிறேன்"

முதல்வர் விஜய்
சென்னை ஐடிஐநியூஸ்தமிழ்24x7

சென்னை ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைகையால் முதலமைச்சரிடம் மாற்றுத்திறனாளி மாணவன் உதவி கேட்டுள்ளார்.

உடனடியாக அதனைப் புரிந்து கொண்டு உறுதியளித்த முதலமைச்சர் விஜய், மாணவர் கொடுத்த கோரிக்கை மனுவை பத்திரமாக தனது கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

குடியரசு தலைவருக்கு கடிதம்

மு.க.ஸ்டாலின் மனு
திமுகநியூஸ்தமிழ்24x7

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை கோரி குடியரசு தலைவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அனுப்பி வைத்துள்ளார். அவசர கதியில் எடுக்கப்பட்ட S.I.R. நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்; இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சண்முகபிரியா வீட்டில் ரெய்டு

சண்முகப்பிரியா
அன்பில் மகேஷ்நியூஸ்தமிழ்24x7

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மோசடி வழக்கு தொடர்பாக பெருங்குடியில் உள்ள தொழிலதிபர் சண்முகபிரியா என்பவரது வீட்டில் ரெய்டு நடைபெற்றது. மோசடி பணத்தை கொடுத்து வைத்ததாக கூறப்படும் புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளி
சென்னை ITI-யில் முதல்வர் விஜய்
newstamil.tv